/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கடை கட்டுமான பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
ரேஷன் கடை கட்டுமான பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரேஷன் கடை கட்டுமான பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரேஷன் கடை கட்டுமான பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : செப் 15, 2024 07:05 AM

வேப்பூர்: வேப்பூர் அருகே புதிய ரேஷன் கடை கட்டுமான பணியை, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
வேப்பூர் அடுத்த மேமாத்துார் ஊராட்சிக்குட்பட்ட தரிசு கிராமத்தில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, புதிய ரேஷன் கடை கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள், விருத்தாசலம் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில், விருத்தாசலம் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.13 லட்சம் மதிப்பில், புதிய ரேஷன் கடை கட்டும் பணிக்காக பூமிபூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் ஞானவேல் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பணியை துவக்கி வைத்தார்.
நல்லுார் பி.டி.ஓ., சண்முக சிகாமணி, காங்., முன்னாள் மாவட்ட தலைவர் பெரியசாமி, கம்மாபுரம் காங்., வட்டார தலைவர் சாந்தகுமார், தி.மு.க., கிளை செயலர் பெருமாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.