/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கடை பணியாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
/
ரேஷன் கடை பணியாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 06, 2024 12:37 AM

கடலுார் : கடலுாரில் ரேஷன் கடை பணியாளர், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுதும் வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று நடந்தது.
கடலுார் மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தி்ல் ஈடுபட்டு, பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். செல்வராஜ், நரசிம்மன் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பு செயலாளர் தேவராஜ் வரவேற்றார். மாநில சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். அரசுப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் இருதயராஜ் கருத்துரையாற்றினார். தமிழ்செல்வம் நன்றி கூறினார்.