ADDED : ஆக 11, 2024 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் ஊராட்சியில், மாவட்ட சுற்றுசுழல் மற்றும் நீர்நிலை இயக்கம் சார்பில் ஏரி புனரமைப்பு பணி துவக்க விழா நடந்தது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீரப்பன் வரவேற்றார்.மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தொழிலதிபர்கள் ராஜசேகர், சரவணன், முன்னிலை வகித்தனர்.
ஒய்வுபெற்ற கல்வி அலுவலர் சுப்ரமணியன், முன்னாள் ரோட்டரி சங்க தலைவர்கள் காமராஜ், மதிவாணன், அரிமா சங்க மூத்த நிர்வாகி வீரப்பன், தொழிலதிபர்கள் அருள், பொறியியல் கல்லுாரி முன்னாள் முதல்வர் செந்தில்குமார், ஊராட்சித் தலைவர் தமிழ்செல்வி செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

