/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலை சந்திப்புகளில் 'ரிப்ளக்டர்' அவசியம்
/
சாலை சந்திப்புகளில் 'ரிப்ளக்டர்' அவசியம்
ADDED : ஆக 12, 2024 05:38 AM
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் ரிப்ளக்டர்கள் இல்லாததால் வாகன ஒட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குகின்றனர்.
கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் வழியாக தினசரி காலை மற்றும் இரவு நேரத்தில் திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்துார், கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இவ்வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
மந்தாரக்குப்பம் அடுத்த குறவன்குப்பம் பகுதியில் இருவழிச்சாலை நான்கு வழிச்சாலையாக துவங்க உள்ள இடத்தில் ரிப்ளக்டர்கள் இல்லாததால் வாகன ஒட்டிகள் சென்டர் மீடியனில் மோதி அடிக்கடி வாகன விபத்துக்களில் சிக்குகின்றனர்.
எனவே இப்பகுதியில் வெளிச்சத்தை பிரதிபலித்து தெரியப்படுத்த முக்கிய சாலை சந்திப்புகளில் ரிப்ளக்டர் அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

