ADDED : மார் 10, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; திருவருள் இறைப்பணி மன்றம் சார்பில் மாசி மாத சமய சொற்பொழிவு நிகழ்ச்சி புவனகிரி சாமுண்டீசுவரி அம்மன் கோவிலில் நடந்தது.
திருவருள் இறைப்பணி மன்றம் மாதம் தோறும் சமய சொற்பொாழிவு நிகழ்ச்சி நடத்தி வருகிறது. இம்மாத நிகழ்ச்சி புவனகிரி சாமுண்டீசுவரி அம்மன் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது.
இதில் 63 நாயன்மார்களில் ஒருவரான முனையடுவார்நாயனார் குறித்து உலகநாதன் பேசினார். ஏராளமானோர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை திருவருள் இறைப்பணி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.