/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் தேர்தல் விதிமீறல் சாலையோர கொடிகள் அகற்றம்
/
கடலுாரில் தேர்தல் விதிமீறல் சாலையோர கொடிகள் அகற்றம்
கடலுாரில் தேர்தல் விதிமீறல் சாலையோர கொடிகள் அகற்றம்
கடலுாரில் தேர்தல் விதிமீறல் சாலையோர கொடிகள் அகற்றம்
ADDED : மார் 31, 2024 04:54 AM

கடலுார், : கடலுாரில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறி, சாலையோரத்தில் நடப்பட்ட அ.தி.மு.க.,-தே.மு.தி.க., கொடி கம்பங்களை போலீசார் அகற்றினர்.
கடலுாரில், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து நேற்று மாலை அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, கடலுாரில் பிரசாரம் செய்தார்.
அதற்காக, மஞ்சக்குப்பம் மைதானத்தில் பொதுக்கூட்டத்திற்கு போலீசில் அனுமதி பெறப்பட்டது.
ஆனால், பழனிசாமியை வரவேற்று கடலுார் அண்ணா மேம்பாலத்தில் இருந்து ஆல்பேட்டை வரை சாலையோரம் அ.தி.மு.க.,-தே.மு.தி.க.,வினர், கட்சி கொடி கம்பங்களை நட்டனர்.
தேர்தல் விதிமுறைகள் மீறி நடப்பட்ட கொடிகளை, கடலுார் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் நேற்று காலை 8:30 மணியளவில் அகற்றினர். அ.தி.மு.க.,வினர், எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் அருண் தம்புராஜை, தொடர்புகொண்டும் கட்சியினர் பேசினர். தேர்தல் விதிமீறல் கூடாது என, கலெக்டர் தெரிவித்ததையடுத்து, கொடிகளை கட்சியினரே அகற்றினர்.
இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

