/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டுச்சாவடி மையம் நீக்கம்: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
/
ஓட்டுச்சாவடி மையம் நீக்கம்: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ஓட்டுச்சாவடி மையம் நீக்கம்: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ஓட்டுச்சாவடி மையம் நீக்கம்: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 20, 2024 05:19 AM
திட்டக்குடி, : கடலுார் லோக்சபா தொகுதி, திட்டக்குடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட 248 ஓட்டுச்சாவடிகளில் நேற்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியது.
அப்போது திட்டக்குடி அடுத்த ம.புடையூர், திருவட்டத்துறை, கொட்டாரம், திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் அமைக்கப்பட்டிருந்த பூத்களில் இ.வி.எம்., மெஷின்களில் ஏற்பட்ட கோளாறுகாரணமாக அரைமணி நேரம் வரை ஓட்டுப்பதிவு தாமதமானது.
ஓட்டுமெஷின்கள் சரி செய்யப்பட்ட பின்னர், அரை மணி நேரம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது. திட்டக்குடி அடுத்த கீழ்ஆதனுார் கிராமத்தில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடி தற்போது நீக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தும், ஓட்டுச்சாவடியை மீண்டும் அமைப்பதற்காக தேர்தல் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதைக்கண்டித்து நேற்று காலை 8.50மணியளவில் அப்பகுதி மக்கள் தேர்தல் ஆணையத்தைக்கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

