/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணா விளையாட்டரங்கில் சீரமைப்பு பணி தீவிரம்
/
அண்ணா விளையாட்டரங்கில் சீரமைப்பு பணி தீவிரம்
ADDED : ஏப் 07, 2024 04:53 AM
கடலுார் : கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் 28.4 ஏக்கர் பரப்பளவில் அண்ணா விளையாட்டரங்கம் உள்ளது.
பழமை வாய்ந்த இந்த விளையாட் டரங்கில், கால்பந்து, ஹாக்கி, கூடைப் பந்து, வாலிபால், கிரிக்கெட், டென்னிஸ், இறகுபந்து உள்ளிட்ட அனைத்து குழு விளையாட்டுக்களுக்கும், தனித்திறன் போட்டிகளுக்காக 400 மீட்டர் ஓடுதளம் மற்றும் 1,600 மீட்டர் நடை பாதை, நீச்சல் குளம் உள்ளிட்ட அனைத்து வசதி களும் ஒருங்கே அமைந்துள்ளது.
இங்குள்ள நடைபாதையில் தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சிக்கும் வருகின்றனர். இதேபோன்று, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விளையாட்டு பயிற்சிக்கு வருகின்றனர்.
இந்நிலையில், இங் குள்ள நடைபாதை பகுதியில் செடிகள் வளர்ந்து புதர்போல் மண்டியதால் நடைபயிற்சிக்கு வருவோர் அச்சமடைந்தனர். மேலும், இங்குள்ள புட்பால் கோர்ட் பகுதி சீரமைக்கப்படாமல் இருந்தது.
நடைபயிற்சி மேற்கொள் வோர் மற்றும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கையை ஏற்று விளையாட்டரங்கில் புட்பால் கோர்ட் பகுதியில் செம்மண் அடித்து, கம்பங்கள் அமைப்பது மற்றும் நடைபாதை புதர்கள் அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

