ADDED : செப் 11, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பஸ் நிறுத்தம் மற்றும் பள்ளி பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்சிற்காக காத்திருக்கும் மாணவிகளை, குறி வைத்து இளைஞர்கள் சேட்டையில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனால் மாணவிகள், பெண்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.
இதையறிந்த சமூக ஆர்வலர்கள், போலீசில் அளித்த தகவலின்பேரில், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் சிவில் உடையில் பெண்கள், மாணவிகளிடம் சேட்டை செய்யும் ரோமியோக்களை கண்காணித்து அவர்களை விரட்டியடித்து வருகின்றனர். இந்த செயல் சமூக ஆர்வலர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

