/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்க கோரிக்கை

ADDED : ஏப் 20, 2024 05:20 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு நான்குமுனை சந்திப்பில் வழிகாட்டி பலகை மற்றும் சிக்னல் ஏதும் இல்லாததால் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் சென்னை-கும்பகோணம் சாலை, விருத்தாசலம் -பரங்கிப்பேட்டை சாலை என நான்குமுனை சந்திப்பு உள்ளது. இந்த நான்கு முனை சந்திப்பில் வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு சரியான வழிகாட்டுதல் பலகை மற்றும் போக்குவரத்து சிக்னல் ஏதும் அமைக்கப்படவில்லை.
இதனால் வெளிமாநிலங்களிலிருந்து வரும் டூரிஸ்ட் வாகனங்கள், லோடு ஏற்றி வரும் லாரிகள், டாரஸ்கள் என தங்கல் ஊருக்கு எந்த வழியாக செல்வது என தெரியாமல் திணறிவருகின்றனர்.
வெளியூர்களிலிருந்து இரவு நேரங்களில் வரும் கார்கள் கும்பகோணம் பகுதிக்கு செல்வதாக நினைத்து புவனகிரி சாலையில் வெகுதுாரம் சென்று பின்னர் திரும்பி வருகின்றனர். மேலும் போக்குவரத்து சிக்னல் ஏதும் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறாக சென்று ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின்றனர்.
எனவே சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு நான்குமுனை சந்திப்பில் வழிகாட்டு பலகை அமைத்து தர வேண்டும். மேலும் போலீசார் போக்குவரத்து சிக்னல் அமைக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.