ADDED : மே 17, 2024 11:06 PM
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன்பிடி இறங்குதளத்தை சீரமைத்துத்தர கலெக்டருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பரங்கிப்பேட்டை பேரூராட்சி முன்னாள் துணை சேர்மன் செழியன் உள்ளிட்ட மீனவர்கள், கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன்பிடி இறங்குதளம் மூலம், 20க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் பயனடைந்து வருகின்றனர். மீன்பிடி இறங்குதளம் கட்டி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளதால் பழுதடைந்துள்ளது. மீன்களை பதப்படுத்தி வாகனங்களில் ஏற்றும் இடத்தில் கழிவு நீர் வெளியேறாத வகையில், வடிகால் துார்ந்துள்ளது. மீன்பிடி இறங்குதளம் முழுவதும் பராமரிப்பு இல்லாமல் முட்புதர்கள் வளர்ந்துள்ளன. சாலைகள் முழுவதும் சேதமடைந்துள்ளது. எனவே, அன்னங்கோவில் மீன்பிடி இறங்கு தளத்தை சீரமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

