/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மருத்துவமனைகள் செயல்பாடு ஆய்வு செய்ய கோரிக்கை
/
மருத்துவமனைகள் செயல்பாடு ஆய்வு செய்ய கோரிக்கை
ADDED : ஆக 08, 2024 11:41 PM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் குறித்து, தமிழக அரசு குழு அமைத்து ஆய்வு செய்ய, மாதர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கடலுார் மாவட்ட தலைவர் மல்லிகா தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனு:
கடலுார் அரசு மருத்துவமனையில் டாக்டர், செவிலியர், ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. பிரசவ வார்டில், கூடுதலாக படுக்கை வசதி ஏற்படுத்த வேண்டும். குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் கடந்த காலங்களில் 9 டாக்டர்கள் இருந்தனர். தற்போது 7 பேர் உள்ளனர். பராமரிப்பு ஊழியர்கள் 13 பேர் இருந்த நிலையில் தற்போது 5 பேர் மட்டுமே உள்ளனர். காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் போதுமான ஊழியர்கள் இல்லை.
சில நேரங்களில் ரத்தம், ஆக்சிஜன் கிடைப்பதில்லை. சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதியும் இல்லை. பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் உடனடியாகவழங்கப்படுவதில்லை. சுகாதார ஊழியர்கள் மூலம் கிராமங்களில் பரிசோதனை முகாம் நடத்தப்படுவதில்லை. எனவே, கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தமிழக அரசு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.