/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்ய கோரிக்கை
/
பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்ய கோரிக்கை
ADDED : ஆக 04, 2024 12:27 AM

சிதம்பரம்: பகுதிநேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிதம்பரத்தில், பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
மாற்றுதிறனாளி பிரிவு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் முன்னிலை வகித்தார்.பிரபாகரன் ராஜாமணிக்கம் கோரிக்கை வலியுறுத்தி பேசினார்.
மகளிரணி கவிதா தீபலட்சுமி, சுபாதேவி, பரமேஸ்வரி, சந்தி ஆகிகயோர் தீர்மானங்கள் குறித்து பேசினர். நிர்வாகிகள் பாக்யராஜ், இளவரசன், வீரமணி, விஜயபாண்டியன், செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின்,தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் கூறியபடிபகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு கொள்கை முடிவு எடுத்து 14 கல்வி ஆண்டுகளாகியும், தற்போது, ரூ. 12,500 தொகுப்பூதியத்தில் பணிபுரியும், 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை, அரசுப்பணிக்கு ஈர்த்து சிறப்பாசிரியர்களாக பணியமர்த்த வேண்டும், 10 லட்சம் மருத்துவ காப்பீடு அறிவிப்பிற்கு அரசாணை வெளியிட்டு செயல்படுத்த வேண்டும்,பணிக்கால மரணத்திற்கு 10 லட்சம் வழங்க வேண்டும், பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தண்டபாணி நன்றி கூறினார்.