/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரி வழியாக அனைத்து பஸ்களையும் இயக்க கோரிக்கை
/
புவனகிரி வழியாக அனைத்து பஸ்களையும் இயக்க கோரிக்கை
ADDED : செப் 11, 2024 01:17 AM
புவனகிரி : கடலுார் - சிதம்பரம் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து பஸ்களையம், பர்மிட் உள்ளபடி புவனகிரி வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊழல் எதிர்ப்பு இயக்கம், கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் குணசேகரன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:
சிதம்பரம் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து கடலுார், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை போன்ற நகர் பகுதிகளுக்கு செல்லும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் கீரப்பாளையம், புவனகிரி, பி.முட்லுார் வழியாக இயக்குவதற்கான பர்மிட் உள்ளது. இதனால் புவனகிரி மற்றும் கீரப்பாளையத்தை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெற்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் இப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது.
இந்நிலையில், தற்போது குறிப்பிட்ட அரசு பஸ்கள் புவனகிரி மார்க்கமாக செல்லாமல் பி.முட்லுார், சி.முட்லுார் மற்றும் மண்டபம் வழியாக பர்மிட் இல்லாத வழியாக செல்கிறது. இதனால் இந்த சாலையில் விபத்து ஏதுனும் ஏற்பட்டால் பயணிகள் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, புவனகிரி வழியாக செல்ல பர்மிட் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பஸ்களும், புவனகிரி, கீரப்பாளையம் வழியாக இயக்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.