/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோதாவரி வாய்க்காலில் மண்மேட்டை அகற்ற கோரிக்கை
/
கோதாவரி வாய்க்காலில் மண்மேட்டை அகற்ற கோரிக்கை
ADDED : ஜூலை 01, 2024 06:27 AM

சேத்தியாத்தோப்பு : வீராணம் ஏரி பூதங்குடி அருகே கோதாவரி வாய்க்கால் மதகு அருகே வாய்க்காலில் கொட்டியுள்ள மண்மேட்டினை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வட்டத்துார், நங்குடி, கோதண்டவிளாகம், விழுப்பெருந்துரை, நந்தீஸ்வரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழைவெள்ளங்காலங்களில் வடியும் தண்ணீர்கோதாவரி வாய்க்காலில் விழுந்து வெள்ளாற்றுக்கு செல்கிறது.
கோதாவரி வாய்க்காலில் கடந்தாண்டு உலக வங்கி நிதியில் வடிகால் ஷட்டர் பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டுமானப்பணிக்காக வாய்க்காலின் குறுக்கே மண்கொட்டி மேடாக்கியுள்ளனர்.
வாய்க்கால் மதகு வடிகால் ஷட்டர் கட்டுமானப்பணிகள் முடிந்து பல மாதங்கள் மேலாகியும் வாயக்காலில் கொட்டப்பட்ட மண் மேட்டினை அகற்றவில்லை.
பாலத்தையொட்டி கரைகளில் கருங்கல் கொண்டு அலைவாரி கட்டுமானப்பணிகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெள்ள காலங்களில் தண்ணீர் தேங்கி வாய்க்கால் முழுவதும்நிற்பதால் விவசாய நிலங்களில் சூழும்அபாயம் உள்ளது. அவ்வப்போது பெய்யும் மழையால் வயல்களில் வெளியேறும் தண்ணீர் வாய்க்காலுக்கு வந்தடையும் தண்ணீர் வடியவில்லை.
எனவே வாய்க்காலின் குறுக்கே கொட்டியுள்ள மண் மேட்டினை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.