/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செப்டிக் டேங் பள்ளத்தில் விழுந்த பசு மாடு மீட்பு
/
செப்டிக் டேங் பள்ளத்தில் விழுந்த பசு மாடு மீட்பு
ADDED : ஆக 10, 2024 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் செப்டிக் டேங்கில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
விருத்தாசலம் மணலுாரை சேர்ந்த கருப்புசாமி என்பவருக்கு சொந்தமான பசு மாடு நேற்று மதியம் மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு திரும்பியது. அப்போது, அவரது வீட்டின் முன்புறம் புதிதாக கட்டப்பட்டு வரும் செப்டிக் டேங்கை மாடு கடந்தபோது, சிமென்ட் சிலாப் உடைந்து 12 அடி பள்ளத்தில் தவறி விழுந்தது.
தகவலறிந்த விருத்தாசலம் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று, பொது மக்கள் உதவியுடன் கயறு கட்டி பசு மாட்டை பத்திரமாக மீட்டனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

