ADDED : ஏப் 09, 2024 11:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஆட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
கடலுார் புதுப்பாளயைம் சீத்தாராம் நகர் முதலாவது குறுக்கு தெரு, கழிவுநீர் கால்வாயில் நேற்று ஆடு ஒன்று விழுந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஆட்டை மீட்க முயற்சி செய்தபோது, முடியவில்லை.
தகவலறிந்த கடலுார் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து, கால்வாய் சிலாப்பை அகற்றி உள்ளே இறங்கி ஆட்டை பாதுகாப்பாக மீட்டனர்.

