ADDED : செப் 02, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் பெண்ணையாற்றில் தவறி விழுந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடலுார், செம்மண்டலத்தை சேர்ந்தவர் தெய்நாயகம்,44; இவர், நேற்று மாலை ஆராய்ச்சிக்குப்பம் சென்று விட்டு கடலுார் கும்மத்தான்மேடு தரைப்பாலம் வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென பெண்ணையாற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடினார்.
அருகில், இருந்தவர்கள் ஆற்றில் இறங்கி அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.