/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நீர்த்தேக்க தொட்டி பூமி பூஜை அமைச்சர் துவக்கி வைப்பு
/
நீர்த்தேக்க தொட்டி பூமி பூஜை அமைச்சர் துவக்கி வைப்பு
நீர்த்தேக்க தொட்டி பூமி பூஜை அமைச்சர் துவக்கி வைப்பு
நீர்த்தேக்க தொட்டி பூமி பூஜை அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஆக 05, 2024 04:52 AM

சிறுபாக்கம்: சிறுபாக்கத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.
சிறுபாக்கம் அடுத்த வடபாதி ஊராட்சியில் 1,000த்திற்கும் மேற்பட் டோர் வசிக்கின்றனர்.
இங்கு, குடிநீர் தட்டுப்பாடு நிலவியதால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தர அப்பகுதி மக்கள் அமைச்சர் கணேசனிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, 30,000 லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட 18.42 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்டுமான பணிக்கான பூமி பூஜை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார்.
மங்களூர் ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், பி.டி.ஓ., தண்டபாணி வீராங்கன், ஆத்மா குழு தலைவர் செங்குட்டுவன், தி.மு.க., ஒன்றிய செயலர்கள் சின்னசாமி, அமிர்தலிங்கம், பாவாடை கோவிந்தசாமி, நகர செயலாளர் பரமகுரு, தாசில்தார் மணிகண்டன், தி.மு.க., நிர்வாகிகள் நிர்மல், ராமதாஸ், வெங்கடேசன், குமணன், திருவள்ளுவன், ஊராட்சி தலைவர் கற்பகம், துணைத் தலைவர் வெண்ணிலா, ஊராட்சி செயலர் செல்வராஜ் உடனிருந்தனர்.