ADDED : ஜூலை 08, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நெல் விதை உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம் வட்டாரம், அம்புஜவல்லிபேட்டையில் நடந்த பயிற்சிக்கு, திட்ட அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார்.
அதில், நெல்லில் புதிய ரகங்கள், நீலப்பச்சை பாசி பயன்பாடு, நாற்றாங்கால் மேலாண்மை தொழில்நுட்பங்கள், நேரடி நெல் விதைப்பு, குறுவை நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள், மண் வளம், இயற்கை விவசாயம், விதை நேர்த்தி மற்றும் குறுவை நெல் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை, நெல் பயிரில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து, களை மேலாண்மை, மாற்றுப் பயிர் சாகுபடி முறைகள் குறித்து செயல்விளக்க பயிற்சி நடந்தது.
வேளாண் விஞ்ஞானிகள், முன்னோடி விவசாயிகள் உட்பட 35க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சி பெற்றனர்.
