ADDED : ஜூலை 08, 2026 06:23 PM
அ நிறம் | அளவு
பெண்ணாடம், ஜூலை 9–
பெண்ணாடம் அடுத்த அரியராவியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
கால்நடைத்துறை சார்பில் நடந்த முகாமிற்கு, பெலாந்துறை கால்நடை மருந்தக டாக்டர் சரண்யா தலைமையிலான குழுவினர், 500க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர்.
முன்னதாக நடந்த நிகழ்ச்சியில், கால்நடைகள் வளர்ப்பது மற்றும் பராமரிப்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
அப்போது, முன்னாள் வார்டு கவுன்சிலர் அர்ச்சுணன், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர்கள் பங்கேற்றனர்.
