UPDATED : ஜூலை 08, 2026 11:32 PM
ADDED : ஜூலை 08, 2026 06:30 PM
அ நிறம் | அளவு
திட்டக்குடி:திட்டக்குடியில் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம் நடந்தது.
சங்க தலைவர் பேரின்பம் தலைமை தாங்கினார். சங்க உயர்நிலை குழு நிர்வாகிகள் பெரியசாமி, பாண்டுரங்கன், பெரியசாமி, ராமலிங்கம், மகளிரணி பரிமளா, சந்திரா உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர், கழிவறை வசதி உட்பட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய துணை செயலாளர் சாமிதுரை நன்றி கூறினார்.
