/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ளாற்று பாலத்தில் விபத்து அபாயம்; வாகன ஓட்டிகள் திக்...திக்..
/
வெள்ளாற்று பாலத்தில் விபத்து அபாயம்; வாகன ஓட்டிகள் திக்...திக்..
வெள்ளாற்று பாலத்தில் விபத்து அபாயம்; வாகன ஓட்டிகள் திக்...திக்..
வெள்ளாற்று பாலத்தில் விபத்து அபாயம்; வாகன ஓட்டிகள் திக்...திக்..
ADDED : ஆக 14, 2024 05:49 AM

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றின் குறுக்கே பாலம் உள்ளது. 35 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டது. பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பாலமாக உள்ளது.
இதன் வழியாக சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலுார், புதுக்கோட்டை, வேலுார், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பஸ், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் 24 மணி நேரமும் பாலத்தின் வழியாக சென்று வருகின்றன.
பாலத்தை நெடுஞ்சாலைத்துறை முறையாக பராமரிக்காததால், பல இடங்களில் சாலை பெயர்ந்துள்ளது.
இந்நிலையில், பாலத்தில் கிழக்கு பகுதி முகப்பு தடுப்பு கட்டை உடைந்து, நடைபாதை சிலாப்புகள் இடிந்து விழுந்துள்ளது. அப்பகுதியில் சாலையும் உள்வாங்கி பல அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் விழுந்து விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது. இதனால், பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இதே நிலை தொடர்ந்தால் பாலத்தின் தடுப்பு கட்டை முற்றிலுமாக விழுந்து பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதுடன், பாலம் துண்டிக்கும் அபாயமும் உள்ளது. எனவே,நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆரம்பத்திலேயே உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.