/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டியில் ரூ.1.27 லட்சம் பறிமுதல ்
/
பண்ருட்டியில் ரூ.1.27 லட்சம் பறிமுதல ்
ADDED : மார் 25, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அருகே ஆவணமின்றி கொண்டு சென்ற 1 லட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாய் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டி சட்டசபை தொகுதி ராசாபளையம் பஸ் நிறுத்தத்தில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வேளாண் அலுவலர் விஜய் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை 5:00 மணியளவில் அவ்வழியாக சிதம்பரம் சேர்ந்த மாரிமுத்து என்பவர் வந்த டி.என்.91 இ., 9495 இன்னோவா கிரிஸ்டா காரை சோதனை செய்தனர். அப்போது எவ்வித ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 27ஆயிரத்து500 ரூபாய் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை தாசில்தார் ஆனந்திடம் ஒப்படைத்தனர்.

