/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதியவரிடம் ரூ.2.83 கோடி மோசடி: தஞ்சாவூர் நபருக்கு வலை
/
முதியவரிடம் ரூ.2.83 கோடி மோசடி: தஞ்சாவூர் நபருக்கு வலை
முதியவரிடம் ரூ.2.83 கோடி மோசடி: தஞ்சாவூர் நபருக்கு வலை
முதியவரிடம் ரூ.2.83 கோடி மோசடி: தஞ்சாவூர் நபருக்கு வலை
ADDED : மே 10, 2024 09:25 PM
கடலுார்: தொழிலில் முதலீடு செய்தால் லாபம் தருவதாக கூறி முதியவரிடம் ரூ.2.83 கோடி ஏமாற்றிய தஞ்சாவூர் நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையை சேர்ந்தவர் அப்துல் அஜீது,60; வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர், கடந்த 2021ம் ஆண்டு சொந்த ஊருக்கு வந்தார். அவரது உறவினர் மூலம் அறிமுகமான தஞ்சாவூர் மாவட்டம், சோழபுரத்தை சேர்ந்த முகமது சுகைல், தான் பெரிய அளவில் மளிகை பொருள் வியாபாரம் செய்வதாகவும், வியாபார அபிவிருத்திக்கு முதலீடு தேவைப்படுவதாகவும், முதலீடு செய்வதற்கு ஏற்பட 40 சதவீதம் லாபம் தருவதாக கூறினார்.
அதனை நம்பி கடந்த ஆண்டு அப்துல் அஜீது 1 கோடியே 69 லட்சத்து 6 ஆயிரத்து 940 ரூபாயை வங்கி மூலம் முகமது சுகைல் கணக்கிற்கு அனுப்பினார். அதற்கு லாபமாக முகமது சுகைல், 63 லட்சத்து 83 ஆயிரத்து 107 ரூபாயை பல தவணைகளாக அப்துல் அஜீதுக்கு கொடுத்தார்.
இதையடுத்து, தன்னுடைய வியாபாரத்தில் 277 கோடியே 33 லட்சம் உள்ள வங்கி கணக்கு வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது, அதை மீட்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க ரூ.1.50 கோடி தேவைப்படுவதாக முகமது சுகைல் கூறினார்.
இதை தொடர்ந்து, அப்துல் அஜீது தனது உறவினர்களின் நகைகளை விற்று 1 கோடியே 14 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயை முகமது சுகைலிடம் கொடுத்தார். பின், ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி முதலீடு செய்த பணத்தில் லாபம் கேட்டபோது முகமது சுகையில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அப்துல் அஜீதுக்கு மிரட்டல் விடுத்தார். அதன்பிறகே முகமது சுகைல் தனி நிறுவனம் துவங்கி தருவதாகவும், வங்கி கணக்கு முடிக்கப்பட்டதாக கூறி 2 கோடியே 83 லட்சத்து 51 ஆயிரத்து 940 ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து அப்துல் அஜீது அளித்த புகாரின் பேரில், முகமது சுகைல் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.