/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கும்பாபிஷேகம் நடத்த ஆர்.டி.ஓ., தடை
/
கும்பாபிஷேகம் நடத்த ஆர்.டி.ஓ., தடை
ADDED : ஏப் 20, 2024 05:22 AM
நெல்லிக்குப்பம் : கும்பாபிஷேகம் நடத்த ஆர்.டி.ஓ.,தடை விதித்ததால் நேற்று யாகசாலை பூஜைகள் துவங்கவில்லை.
நெல்லிக்குப்பம் அடுத்த நத்தம் ஊராட்சியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் செய்வதில் ஊராட்சி தலைவர் நவீன்குமார்,த.வா.க.நிர்வாகி ராஜ் கோஷ்டியினருக்கு இடையே பிரச்னை இருந்தது.இந்நிலையில் ஊர் மக்கள் இணைந்து திருப்பணிகளை முடித்து 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
ஆர்.டி.ஓ.அபிநயா பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கும்பாபிஷேகம் நடத்த தடை விதித்தார்.இதனால் தேர்தலை புறக்கணிப்பதாக பக்தர்கள் அறிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி..பழனி பேச்சுவார்த்தை நடத்தி இன்று 20 ஆம் தேதி சமாதானம் கூட்டம் நடத்தி நல்ல முடிவு எடுக்கலாம் என கூறியதால் தேர்தலில் ஓட்டுப்போட்டனர்.
ஆனால் தடை இருப்பதால் நேற்று துவங்க வேண்டிய யாகசாலை பூஜைகள் துவங்காததால் பக்தர்கள் அதிருப்பதியடைந்தனர்.

