ADDED : ஜூலை 14, 2026 08:53 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் தனியார் மண்டபத்தில் ரூபி கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் சாமுவேல் கென்னடி – பிரிஸ்கில்லா எப்சிபா மகள் மருத்துவர் ஷைனி ரூபினா என்பவருக்கும், ஆண்டனி பப்ளிக் பள்ளி உரிமையாளர் ஜார்ஜ் யுவராஜ் – லிடியா ஜெயந்தி மகன் ஜோசப் ரிச்சி ஜார்ஜ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தமிழக சட்டசபை சபாநாயகர் பிரபாகர் தலைமை தாங்கினார்.
அமைச்சர் ராஜ்குமார், த.வெ.க., தலைமை நிலைய செயலர் ராஜசேகர், மேற்கு மாவட்ட செயலர் விஜய், நகர செயலாளர் அப்பாஸ் அலி, ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த், ரோட்டரி சங்க தலைவர் பரமசிவம், நிர்வாகிகள் வழக்கறிஞர் பாலசந்தர், அசோக்குமார், தீபக் சந்த், கார்த்திக், லாவா குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மணமகள் அண்ணன் ஜெய்சன் செல்வராஜ், அண்ணி சுவாதிகா, மாமா கூடுதல் அரசு வழக்கறிஞர் விஜயகுமார், அத்தை ஜீவா ஜெயந்தி ஜாய்ஸ், மாமா ஆர்ம்ஸ்ட்ரோங், அத்தை ஆசிரியர் ஹெலன் கமலா, மாமன்கள் மருத்துவர் அஜித்குமார் – தேவதர்ஷினி; ஜோஷ்வா – காரோலின்; வழக்கறிஞர் விக்னேஷ்குமார், பண்ருட்டி பிரதிபா கேஷியூஸ் தேவநாதன், மற்றும் மணமகன் தம்பி ரியோ ஜார்ஜ், நகர அனைத்து வர்த்தகர் சங்க தலைவர் கோபு, செயலர் மணிவண்ணன், தமிழ்வாணன், டாக்டர்கள் தமிழரசி, வள்ளுவன், விஜய், நகராட்சி கவுன்சிலர் சிங்காரவேலு, பா.ம.க., திருஞானம், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் மொய்தீன் வழக்கறிஞர்கள் அருள்குமார், பாரதி, குணச்செல்வன் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஜெய்சன் செலவராஜ் நன்றி கூறினார்.
