/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆளும் கட்சி-ரூ.200, எதிர் கட்சியும்- 200! கூடுதலாக எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம்

ADDED : ஏப் 17, 2024 11:29 PM
சிதம்பரம் : சிதம்பரம் தொகுதியில் ஆளும் கட்சியும் 200, எதிர் கட்சியும் 200 ரூபாய் கொடுப்பதால், கூடுதலாக எதிர்பார்த்த சிதம்பரம் தொகுதியை சேர்ந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். பணமோ, பரிசு பொருளோ பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என, தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
ஆனாலும், தேர்தலின்போது, பணம் பட்டுவாடா இருக்கத்தான் செய்கிறது. ஒருசிலரை தவிர பெரும்பாலோனார், பணத்தை எதிர்பார்க்கின்றனர்.
அந்த வகையில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. அதையொட்டி, நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில் நேற்று முதல் ஒவ்வொரு தொகுதியிலும் பணம் பட்டுவாடா துவங்கியுள்ளது.
சிதம்பரம் தொகுதியை பொருத்த வரையில், ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி என, இருவருமே வாக்காளர்களை கவர்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இத்தேர்தலில் ஆளும் கட்சி எப்படியும் ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுக்கும் என, எதிர்பார்த்தனர். ஆனால், 200 மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆளும் கட்சிதான் அப்படி ஏமாற்றியது என்றால், எதிர் கட்சியும் அதே தொகையை கொடுக்கிறதாம்.
அதுவும், அனைவருக்கும் கிடைக்காமல், அப்பகுதி நிர்வாகிகள் மூலம், சாதகமானவர்கள் என முடிவு செய்தவர்களுக்கு மட்டுமே வழங்குவதாகவும் புலம்புகின்றனர்.