ADDED : செப் 01, 2024 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த அருண்மொழிதேவன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சத்யா மைக்ரோ கேபிடல் நிதி நிறுவனத்தின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
மண்டல மேலாளர் பூமிநாதன் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டார். ரோட்டரி கிளப் செயலாளர் ஏகாம்பரம், தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். வட்டார மேலாளர் மகேந்திரன் வரவேற்றார்.
மரக்கன்றுகள் நடுவதின் அவசியம், பயன்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கர், ஊராட்சி செயலாளர் குமாரதேவன் உட்பட பலர் பங்கேற்றனர். புவனகிரி கிளை மேலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.