ADDED : செப் 14, 2024 07:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே ஜே.சி.ஐ., சார்பில், மரக்கன்று நடும் விழா புளியங்குடி ஏரிக்கரையில் நடந்தது.
விழாவிற்கு ஜேசீஸ் தலைவர் செந்துாரபாண்டியன் தலைமை தாங்கினார்.
செயலாளர் சிவராமன் வரவேற்றார். தொடர்ந்து ஏரிக்கரை சுற்றிலும் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் முன்னாள் தலைவர்கள் மனோகர், கோபிநாத், துணைத் தலைவர் விக்னேஷ் மகேந்திரவர்மன், அருள்மொழி, தீலீபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.