/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.பஞ்சங்குப்பத்தில் மரக்கன்று நடும் விழா
/
வி.பஞ்சங்குப்பத்தில் மரக்கன்று நடும் விழா
ADDED : ஜூன் 24, 2024 06:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் மற்றும் வி.பஞ்சங்குப்பத்தில் பாரதிய ஜன சங்கத்தை துவக்கிய ஷியாம் பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தையொட்டி, மரக்கன்றுகள்நடப்பட்டது.
பா.ஜ., தொழிற்பிரிவு மாவட்ட தலைவர் ராகேஷ் தலைமை தாங்கி, ஷியாம் பிரசாத் முகர்ஜியின் படத்திற்கு மாலை அணிவித்து, மாணவர்களுக்கு நோட்டு பேனா வழங்கி, மரக்கன்றுகளை நட்டார்.
மாவட்ட செயலாளர் திருமாவளவன் முன்னிலை வகித்தார்.
நிர்வாகிகள் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் கமலக்கண்ணன், தொழிற்பிரிவு ஒன்றியதலைவர் கதிரேசன், கிளை தலைவர் சுதர்சனம், வெங்கடேசன், சங்கர், தங்கராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.