sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முந்திரி தோட்டங்களில் விஞ்ஞானிகள் ஆய்வு

/

முந்திரி தோட்டங்களில் விஞ்ஞானிகள் ஆய்வு

முந்திரி தோட்டங்களில் விஞ்ஞானிகள் ஆய்வு

முந்திரி தோட்டங்களில் விஞ்ஞானிகள் ஆய்வு


ADDED : ஏப் 09, 2024 05:41 AM

Google News

ADDED : ஏப் 09, 2024 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் முந்திரி தோட்டங்களில், மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் கள ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் கீழ் உள்ள விருத்தாசலம், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், ஆண்டிமடம் பகுதிகளில் முந்திரித் தோட்டங்களில் பூப்பது மற்றும் காய்ப்பதில் உள்ள பிரச்னையை கண்டறியும் வகையில், விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் பாஸ்கரன், இணை பேராசிரியர்கள் (தோட்டக்கலை) சதீஷ், பாஸ்கரன், உதவி பேராசிரியர் (பூச்சியியல்) ராஜபாஸ்கர் ஆகியோர் இரண்டு நாட்கள் கள ஆய்வு நடத்தினர்.

அதில், அனைத்து மரங்களும் பூக்கும் நிலையில் உள்ளன. ஆனால் காய்ப்பிடிப்பு வெகுவாக பாதித்துள்ளது.

அனைத்து இடங்களிலும் பெரிய அளவில் பூச்சி மற்றும் நோய் பாதிப்பு இல்லை.

இருப்பினும் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் தொடர்ந்து மழை பெய்யாத காரணத்தால் பெண் மற்றும் இருபால் பூச்சிகள் எண்ணிக்கை குறைந்து காய்ப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மகசூல் குறைய வாய்ப்புள்ளது.

இதனை சரிசெய்து போதுமான பாதுகாப்பு பாசனம், தண்ணீர் தெளித்தல் மற்றும் நல்ல மேலாண்மை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கினர். ஆய்வின்போது, வனத்தோட்டக்கழக மண்டல மேலாளர் ராஜேஷ், வன அலுவலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us