நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் வண்ணாரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில், ஆடிமாத செடல்உற்வசம் நடந்தது.
கோவிலில், கடந்த 1ம் தேதி கொடியேற்றுதலுடன் விழா துவங்கியது. நேற்று மதியம் 2:00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. மாலை 6:00 மணிக்குகாத்தவராய சுவாமிக்கு கும்பம் கொட்டுதல், இரவு 7:30 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, கடலுார் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் நேற்று செடல் உற்வத்தையொட்டி, பக்தர்கள் செடல் போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.