/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்
/
ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்
ADDED : ஜூலை 23, 2024 12:06 AM
கடலுார் : கடலுார், முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
கடலுார், முதுநகரில் பிரசித்திப் பெற்ற ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவத்தை முன்னிட்டு நாளை 24ம் தேதி மாலை 5:00 மணிக்கு விநாயகர் பூஜை, 25ம் தேதி காலை 7:30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.
தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் இரவு வீதியுலா நடக்கிறது. 9ம் நாள் உற்சவமான வரும் 2ம் தேதி காலை செடல் உற்சவம், இரவு ரத உற்சவம் நடக்கிறது. 4ம் தேதி காலை 7:00 மணிக்கு திருத்தேர் உற்சவம், இரவு 7:00 மணிக்கு தெப்பல் உற்சவம் நடக்கிறது. 5ம் தேதி இரவு 7:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், 6ம் தேதி இரவு 7:00 மணிக்கு விடையாற்றி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.