/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நா.த.க., வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கடலுாரில் சீமான் பிரசாரம்
/
நா.த.க., வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கடலுாரில் சீமான் பிரசாரம்
நா.த.க., வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கடலுாரில் சீமான் பிரசாரம்
நா.த.க., வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கடலுாரில் சீமான் பிரசாரம்
ADDED : ஏப் 16, 2024 10:56 PM

கடலுார்- கடலுாரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரர் மணிவாசகத்தை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் கடலுார் லோக்சபா தொகுதி வேட்பாளர் மணிவாசகன், சிதம்பரம் வேட்பாளர் ஜான்சிராணி, பெரம்பலுார் வேட்பாளர் தேன்மொழி அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
வேட்பாளர் மணிவாசகன் தலைமை தாங்கினார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, வேட்பாளர்களை அறிமுகம் செய்து மைக் சின்னத்திற்கு ஓட்டுகேட்டு பேசினார்.
அப்போது, ஒரு ஆம்புலன்ஸ் சென்றது. இதையடுத்து, அவர் பேசும்போது, ஆம்புலன்ஸ் சென்றாலே பயமாக இருக்கிறது.
எத்தனை கோடி போகுதோ. குடும்ப தலைவிக்கும் ஆயிரம் ரூபாய், ஓட்டுக்கும் ஆயிரம் ரூபாய். பறக்கும் படையினர் சாமானிய மக்களிடம் பணத்தை பறிக்கின்றனர்.
இரண்டு ஆம்புலன்சை பிடித்தால் நாம் தேர்தலில் செலவு செய்யலாம்.
இந்த மாதிரி சிந்தனை எல்லாம் திராவிட மாடலுக்கு தான் வரும் என, பேசினார். அப்போது, மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோலன், மாவட்ட செயலாளர் சாமிரவி, மாவட்ட பொறுப்பாளர்கள் சாதிக் பாஷா, மகாதேவன், செந்தில், சாந்தகுமார், கண்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

