/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனுமதியின்றி பதுக்கிய வெடிபொருள் பறிமுதல்
/
அனுமதியின்றி பதுக்கிய வெடிபொருள் பறிமுதல்
ADDED : ஆக 26, 2024 04:38 AM

கடலுார்: கடலுார் அடுத்த நொச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், 38.
இவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு தயாரிக்க வெடி பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கடலுார் துறைமுகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தாசில்தார் பலராமன் மற்றும் முதுநகர் இன்ஸ்பெக்டர் ரேவதி, சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்கு 10 சாக்கு மூட்டைகளில், 120 கிலோ எடை கொண்ட, அவுட் வெடி தயாரிப்பதற்கான வெடிபொருட்கள் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
அவற்றை, வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பறிமுதல் செய்து, அவற்றை பதுக்கி வைத்திருந்த கொட்டகைக்கு சீல் வைத்தனர்.
தீயணைப்பு துறையினர், வெடி பொருட்களின் மதிப்பு குறித்து கணக்கீடு செய்து வருகின்றனர். கடலுார் துறைமுகம் போலீசார் விசாரிக்கின்றனர்.

