ADDED : மே 08, 2024 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அடுத்த மாத்துார் ஆரம்ப சுகாதார நிலையத்தில், அவசர காலங்களில் தற்காப்பு செயல்விளக்கப் பயிற்சி நடந்தது.
மங்கலம்பேட்டை அடுத்த மாத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் பேரிடர், அவசர காலங்களில் நம்மை நாமே தற்காத்து கொள்வது குறித்து செயல்விளக்கப் பயிற்சி நடந்தது. மருத்துவர் முகமது ரிஸ்வான் தலைமை தாங்கினார்.
தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட வீரர்கள் பேரிடர் காலங்களில் மீட்பு, சமையல் காஸ் சிலிண்டரில் தீ விபத்துகளில் தற்காப்பு பயிற்சிகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். மருந்தாளுனர் சிவசங்கரன், செவிலியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.