ADDED : ஜூன் 15, 2024 04:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்வேலி: நெய்வேலி அடுத்த வடக்குமேலுாரில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப் இன்ஸ்பெக்டர்கள் டைமன் துரை, செல்வகுமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் வடக்கு மேலுாரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, செட்டிகுளம் தைலமர தோப்பில் இருந்து ஓடிய 4 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அதில், நெய்வேலி பி 2 பிளாக் மாற்று குடியிருப்பை சேர்ந்த அண்ணாதுரை மகன் ரவிக்குமார்,21; மணி மகன் பிரகாஷ்,19; முருகன் மகன் பிரதீப்ராஜ்,19; கணேசன் மகன் அறிவழகன்,18; என்பதும், இவர்கள் தைலமர தோப்பில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பது தெரிய வந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.