/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி அலட்சியத்தால் தொடர் விபத்து
/
காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி அலட்சியத்தால் தொடர் விபத்து
காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி அலட்சியத்தால் தொடர் விபத்து
காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி அலட்சியத்தால் தொடர் விபத்து
ADDED : மே 30, 2024 05:38 AM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் உடையார்குடியில், புதியதாக கட்டப்பட்ட கல்வெர்ட் பாலத்தில் சாலை அமைக்காததால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் பல்வேறு பகுதிகளில் திட்ட பணிகள் நடந்து வருகிறது. உடையார்குடி மாரியம்மன் கோவில் அருகே பஸ் நிலையம் செல்லும் சாலையில் கடந்த மாதம் கல்வெர்ட் பாலம் அமைக்கப்பட்டது.
பணிகள் முடிந்த நிலையில், இணைப்பு சாலை அமைக்காததால், அந்த வழியாக வாகனங்கள் செல்வோர் கீழே விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடந்து செல்பவர்கள் கூட கால் இடறி கீழே விழுந்து விடுகின்றனர். நேற்று முன்தினம் இரவு, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற, கஜெந்திரன் என்பவர் பாலத்தின் அருகே பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார்.
தினமும் விபத்துகள் நடந்துவரும் நிலையில், பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் முன்பு, பேரூராட்சி நிர்வாகம் சாலை அமைத்து, உயிர் பலியை தடுக்க வேண்டும்.