/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் பகுதியில் எள் அறுவடை தீவிரம்
/
விருத்தாசலம் பகுதியில் எள் அறுவடை தீவிரம்
ADDED : மே 30, 2024 05:57 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் சாகுபடி செய்துள்ள, எள் செடிகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விருத்தாசலம் அடுத்த ரூபநாராயணநல்லுார், விஜயமாநகரம், சின்னவடவாடி, பெரியவடவாடி, எ.வடக்குப்பம், எடைச்சித்துார் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் போர்வெல், கிணறு பாசனம் மூலம் எள் சாகுபடி செய்வது வழக்கம்.
அதேபோல் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் போர்வெல், கிணறு பாசன விவசாயிகள் எள் சாகுபடி செய்திருந்தனர்.
செடிகள் தற்போது நன்கு வளர்ந்துள்ள அறுவடைக்கு தயாராக உள்ளதால், கடந்த இரண்டு வாரமாக விருத்தாசலம் பகுதியில் சாகுபடி செய்துள்ள எள் செடிகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.