/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாகனங்களுக்கு தீ வைப்பு; காப்பகத்தில் சிறுவன் அடைப்பு
/
வாகனங்களுக்கு தீ வைப்பு; காப்பகத்தில் சிறுவன் அடைப்பு
வாகனங்களுக்கு தீ வைப்பு; காப்பகத்தில் சிறுவன் அடைப்பு
வாகனங்களுக்கு தீ வைப்பு; காப்பகத்தில் சிறுவன் அடைப்பு
ADDED : மே 10, 2024 09:55 PM
சிதம்பரம் : ஸ்கூட்டியில் திருட முயன்றபோது கைவிரல் சிக்கிக் கொண்ட ஆத்திரத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த சிறுவனை போலீசார் பிடித்து காப்பகத்தில் அடைத்தனர்.
சிதம்பரம், துறவடி தெருவை சேர்ந்தவர் கார்த்தி; டிராவல்ஸ் நடத்தி வருகிறார். கடந்த 8ம் தேதி இரவு, இவரது வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த பைக், ஸ்கூட்டி, கார் மற்றும் டெம்போ டிராவலர் வேன் மர்மான முறையில் எரிந்து சேதமடைந்தன.
புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., பதிவு களை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த ஆதரங்களின் அடிப்படையில் கஸ்பா தெருவை சேர்ந்த 15 வயது சிறுவனை பிடித்து விசாரித்தனர்.
அதில் சிறுவன், சம்பவத்தன்று பைக் ஒன்றை திருடிக் கொண்டு வந்தபோது பெட்ரோல் தீர்ந்த தால், கார்த்தி வீட்டின் முன் நின்றிருந்த பைக்கில் பெட்ரோல் திருடினார்.
பின்னர், அருகில் இருந்த ஸ்கூட்டியில் பெட்ரோல் திருட, சீட்டை திறக்க இன்ஜின் அடிப்பகுதியில் கையை நுழைத்தபோது கை விரல் சிக்கிக் கொண்டது. நீண்ட நேரம் போராடி விரலை வெளியே எடுத்த தில் சிறு காயம் ஏற்பட்டது.
அதில் ஆத்திரமடைந்த சிறுவன் பாட்டிலில் பிடித்து வைத்திருந்த பெட்ரோலை, வாகனங்கள் மீது ஊற்றி தீவைத்ததை ஒப்புக் கொண்டார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து சிறுவனை கடலுாரில் உள்ள சிறார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.