/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டுச்சாவடிகளில் நிழல் பந்தல்: கலெக்டர் உத்தரவு
/
ஓட்டுச்சாவடிகளில் நிழல் பந்தல்: கலெக்டர் உத்தரவு
ADDED : ஏப் 18, 2024 04:57 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் ஓட்டுச்சாவடி மையங்களில், வெயில் தாக்கம் காரணமாக நிழல் பந்தல் அமைக்க அதிகாரிகளுக்கு, கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவிட்டார்.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் 18 இடங்களில், 38 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகிறது. இந்த இடங்களை கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளதா என, ஆய்வு செய்த அவர், மாற்றுத்திறனாளிகள் ஓட்டு போட எளிதாக வந்து செல்ல சக்கர நாற்காலிகள், கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். வெயில் அதிகமாக இருப்பதால் வாக்காளர்களுக்கு நிழல் தரும் வகையில் பந்தல் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

