/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரோந்து பணியில் ஈடுபடாத எஸ்.ஐ., ஆயுத படைக்கு மாற்றம்
/
ரோந்து பணியில் ஈடுபடாத எஸ்.ஐ., ஆயுத படைக்கு மாற்றம்
ரோந்து பணியில் ஈடுபடாத எஸ்.ஐ., ஆயுத படைக்கு மாற்றம்
ரோந்து பணியில் ஈடுபடாத எஸ்.ஐ., ஆயுத படைக்கு மாற்றம்
ADDED : பிப் 10, 2025 05:55 AM
கடலுார் : அண்ணாமலை நகர் சப் இன்ஸ்பெக்டரை ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்து, கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பயிற்சி சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் அன்பழகன். இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன் சிதம்பரம், அண்ணாமலை நகர் சப் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்ததில் இருந்து பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியமாக இருந்துள்ளார். மேலும், காலையில் நடக்கும் அணிவகுப்பில் பங்கேற்காமலும், இரவு ரோந்து பணியில் ஈடுபடாமலும் இருந்துள்ளார்.
கடந்த வாரம் அண்ணாமலை நகரில், புதுச்சேரி மது பாட்டில் விற்பனை செய்தவர் மீது வழக்கு பதியாமலும், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், பணத்தை அவரே வைத்துக் கொண்டதாகவும் புகார் எழுந்தது. அதன்பேரில், எஸ்.பி. ஜெயக்குமார் விசாரணை நடத்தி, சப் இன்ஸ்பெக்டர் அன்பழகனை கடலுார் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.