/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கடை ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
ரேஷன் கடை ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஆக 10, 2024 05:49 AM

கடலுார்: கடலுாரில் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். பின், தொலைதுாரத்தில் பணிபுரியும் ரேஷன் கடை விற்பனையாளர்களை அயற்பணி மூலமாக அவர்களின் இருப்பிடம் அருகில் பணிபுரிய ஏதுவாக இடமாறுதல் ஆணை வழங்கினார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயலாட்சியர் கோமதி முன்னிலை வகித்தார்.
மண்டல இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன் பேசினார். கோல்டன் சிட்டி அரிமா சங்கம் சார்பில் விற்பனையாளர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, தைராய்டு கண்டறில் பரிசோதனை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., ராஜசேகரன், பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர் இம்தியாஸ், சரக துணைப் பதிவாளர்கள் துரைசாமி, கவிதா, டான்பெட் துணைப் பதிவாளர் வைரமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜீ, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் (பொறுப்பு) குமரவேல், கூட்டுறவு சார் பதிவாளர்கள் ரவிசங்கர், புருஷோத்தமன், சரண்யா, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் தேவி உட்பட பலர் பங்கேற்றனர்.