/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேல்பட்டாம்பாக்கத்தில் குடிநீர் இணைப்பு பணி மெத்தனம்: கவுன்சிலர்கள் புகார்

ADDED : செப் 12, 2024 06:09 AM

நெல்லிக்குப்பம்: மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் ஜெயமூர்த்தி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சண்முகசுந்தரி மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
மத்திய அரசின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் அம்ரூத் திட்டத்தில் 1,852 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியை விழுப்புரம் எஸ்.எஸ்.வி.டெவலப்பர்ஸ் நிறுவனம் செய்கிறது. அதற்கான அவகாசம் முடிந்தும் இன்னும் ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு வழங்கவில்லை. பலமுறை ஒப்பந்ததாரரிடம் பேசியும் பயனில்லை. ஒரு மாதத்துக்குள் பணியை முடிக்காவிட்டால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், சந்தைதோப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகம் கட்ட வேண்டும். மேல்பட்டாம்பாக்கம் ஏரியை நெல்லிக்குப்பம் ஏ.எம்.எம்.அறக்கட்டளை மூலம் தூர்வாரி தர ஒப்புதல் அளித்துள்ளனர். 65 ஏக்கர் பரப்பு உள்ள அந்த ஏரியை அளந்து கொடுக்க பலமுறை மனு அளித்தும் சர்வேயர் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளார். உடனடியாக அளந்து தர, மன்றம் சார்பில் வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.