/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூழாங்கற்கள் கடத்தல்: லாரி பறிமுதல்
/
கூழாங்கற்கள் கடத்தல்: லாரி பறிமுதல்
ADDED : மே 18, 2024 06:05 AM
விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அருகே கூழாங்கற்கள் கடத்திச் சென்ற டிப்பர் லாரியை, சுரங்கத்துறை அதிகாரி மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
விழுப்புரம் மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் ராமஜெயம் தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் பகுதியில் வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது, மங்கலம்பேட்டை புறவழிச்சாலையில், கர்னத்தம் வழியாக வந்த டிப்பர் லாரியை (டிஎன்40 - எக்ஸ்5666) மடக்கி சோதனை செய்தனர்.
அதில், கூழாற்கற்களை கடத்திச் சென்றது தெரிய வந்தது. டிரைவர் தப்பி யோடிய நிலையில், லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், மங்கலம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக, சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப் பதிந்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகிறார்.

