
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி மற்றும் கீரப்பாளையம் பகுதியில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.
புவனகிரி மற்றும் கீரப்பாளையம் பகுதியில் கடந்த 2 நாட்களாக திடீரென மழை பெய்தது. இதையடுத்து, நேற்று காலை 8:00 மணி வரை பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.