தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பாலம் அமைக்கும் பணியில் மண் உறுதி தன்மை சோதனை

பாலம் அமைக்கும் பணியில் மண் உறுதி தன்மை சோதனை

பாலம் அமைக்கும் பணியில் மண் உறுதி தன்மை சோதனை


ADDED : மே 08, 2024 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2024 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் : கடலுார் கெடிலம் ஆற்றில் புதிய மேம்பாலம் கட்டும் பணிக்காக, மணல் மூட்டைகள் அடுக்கி, மண் உறுதி தன்மையை சோதிக்கும் பணி நடந்து வருகிறது.

கடலுார் கெடிலம் ஆற்றின் மேல் ஆங்கிலேயர் காலத்தில் இரும்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் மூலம் கடலுார் வழியாக, புதுச்சேரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, விழுப்புரம், நாகப்பட்டினம், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து இருந்து வந்தது. நுாறு ஆண்டுகள் பழமையான இந்த பாலம் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால், இரும்பு பாலத்திற்கு அருகில் புதியதாக மேம்பாலம் கட்டப்பட்டு, வாகன போக்குவரத்து சென்று வருகிறது.

இந்நிலையில், கெடிலம் ஆற்றின் குறுக்கே பழைய இரும்பு பாலம் இடிந்து விழுந்த இடத்தில் புதிய பாலம் கட்ட தேசிய நெடுச்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர். இதையடுத்து, புதிய மேம்பாலம் கட்டுவதற்கு 22.15 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

இதை தொடர்ந்து, இரும்பு பாலம் பகுதியில் ராட்சத துாண்கள் அமைக்க மண் பரிசோதனை செய்யும் பணி நடந்தது.

இந்நிலையில், தற்போது ஆற்றில் மேம்பாலம் துாண் அமைக்கும் பகுதியில், எவ்வளவு எடை தாங்கும் என்பதை அறிய, மண் உறுதி தன்மை சோதனை பணி நடக்கிறது. அதற்காக, மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us