/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி.,யில் தனியார் நிறுவன தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு
/
என்.எல்.சி.,யில் தனியார் நிறுவன தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு
என்.எல்.சி.,யில் தனியார் நிறுவன தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு
என்.எல்.சி.,யில் தனியார் நிறுவன தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு
ADDED : செப் 04, 2024 03:44 AM
நெய்வேலி,: என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 125 தொழிலாளர்களின் பிரச்னை சுமூகமாக முடிவடைந்தது.
நெய்வேலி என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் சில இடங்களில் டைசன் தனியார் நிறுவனம் சுரங்கப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பிட்ட ஒரு பகுதியில் இந்நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து அந்த பணிகளை மற்றொரு புதிய ஒப்பந்ததாரர் புதிதாக டெண்டர் எடுத்து செய்து வருகிறார்.
டைசன் நிறுவனத்தில் பணியாற்றிய 125 ஒப்பந்த தொழிலாளர்களில் 97 பேர் மட்டும் தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டது.
மீதமுள்ள 28 பேருக்கு புதிய ஒப்பந்தாரர் பணி தர மறுத்துவிட்டார். இதனை ஏற்க மறுத்து 125 தொழிலாளர்களும் பணிக்கு செல்லாமல் 2ம் சுரங்கத்தின் நுழைவாயில் முன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, நெய்வேலி டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., சையத் ஹமூத் மற்றும் டி.எஸ்.பி., சபியுல்லா முன்னிலையில் நேற்று மதியம் 1:40 மணிக்கு பேச்சுவார்த்தை நடந்தது. 2ம் சுரங்க முதன்மை பொது மேலாளர் சஞ்சீவி மற்றும் என்.எல்.சி., நிலக்கரி சுரங்கங்களின் மனிதவளத்துறை பொது மேலாளர் அறிவு ஆகியோர் என்.எல்.சி., தரப்பிலும், தொழிலாளர்கள் தரப்பில் என்.எல்.சி., ஜீவா சங்கத்தின் சிறப்பு செயலாளர் சேகர், தலைவர் அந்தோணி செல்வராஜ் ஆகியோர் தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து பேசினர்.
அதில், புதிய ஒப்பந்த படி 97 பேருக்கு வேலையும், மீதி உள்ள 28 பேருக்கு டைசன் கம்பெனியின் வேறு பணியிடத்தில் பணி தர முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 125 தனியார் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்னை முடிவுக்கு வந்தது.