/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறப்பு தொழில் கடன் விழா:கடலுாரில் 19ல் துவக்கம்
/
சிறப்பு தொழில் கடன் விழா:கடலுாரில் 19ல் துவக்கம்
ADDED : ஆக 13, 2024 09:44 PM
கடலுார் ; தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா வரும் 19ம் தேதி துவங்குகிறது.
இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடலுார் செம்மண்டலத்தில் இயங்கிவரும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை அலுவலகம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா 19.08.2024 முதல் 06.09.2024 வரை நடக்கிறது. இதில், டி.ஐ.ஐ.சி யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள், மாநில அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் அதிகபட்சமாக 1.50 கோடி ரூபாய் வரை வழங்கப்படும்.
இம்முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50சதவீத சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பை புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.